Monday, December 8, 2008

என் விதை

எங்கோ படித்தது. . . பாலகுமாரன் என்று நினைக்கிறேன். . .
“காதலித்த பெண்ணை மறப்பது மரணத்திற்கு சமமானது. . .மரணம் நிஜம் என்று ஏற்றுக்கொள்பவனால் மட்டுமே காதல் துயரத்தையும் தாங்கிகொள்ளமுடியும். . .என்ன தாங்கினாலும் ஒரு மரம் வேரோடு பெயர்ந்துபோல் ஆழமான பள்ளம் தோன்றிடும். . .மெல்ல கால மண் மூடி அந்த பள்ளமும் மறையும்.”

And the following was the first poem I wrote for my wife, when she was not.

எனக்கென நிழல் வேண்டி
ஆழ நிலம் கீறி
தரமாய் ஒரு விதை
பதமாய் நட்டு வைத்தேன்.
கைபுனல் நீர்வார்த்து
காவலாய் நான் இருந்தேன்.
முளைவிட்டு விதை வளர
உரமிட்டு காத்திருந்தேன்.
விருட்சமாக வளர்ந்திடவே
மழை வேண்டி நோன்பிருந்தேன்.
இடியும் மின்னலும்

இறைவன் ஒரு நாள்
மழையினூடே அனுப்பி வைத்தான்.
மண் புரண்டிடநட்டு வைத்த விதையை
கண் முன்னே ஏமாற்றி
வாரி சென்றது வெள்ளம்.
அரண்டு புரண்டு
தூரம் சென்றும் மறைந்தது.
அதன் பின்னே எனக்கென

எதையும் நான் நட்டதில்லை.
எனக்கொன்றும் வருத்தமில்லை.
நான் தொலைத்த விதை
எங்காவது நிலம் ஊன்றியிருக்கும்.
என் பெயர் சொல்லாது
எவருக்காவது நிழல் தந்திருக்கும்.
போகிற வழியெல்லாம்

கண்ணிற்படுகிற மரத்திற் கெல்லாம்
ஒரு பிடி நீரை
நின்று நான் வார்த்திடுவேன்.
என் விதையின் விருட்ச்சமாயின்
எனை பார்த்து தலையசைக்கும்
என்ற நம்பிக்கை எனக்குண்டு.

No comments: